ஆடி மாத பால்முறை திருவிழா

உடன்குடி சந்தையூரில் ஆடி மாத பால்முறை திருவிழா நடைபெற்றது.

Update: 2022-08-17 16:01 GMT

உடன்குடி:

உடன்குடி சந்தையடியூர் தாகம் தணிந்தபதியில் ஆடிமாத பால்முறைத் திருவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அன்னம், குதிரை, கருடர், அனுமார், சர்ப்ப வாகனங்களில் அய்யா பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் தர்மம் எடுத்தல், உம்பான் தர்மம் வழங்கல், சந்தனக்குட பவனி, பட்டிமன்றம், சிறப்பு அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நிறைவு நாளான நேற்று காலை அய்யா, பூ சப்பரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீடுகள் தோறும் பக்தர்கள் பல்வேறு நேர்த்திகடன்களை அய்யாவுக்கு படைத்து வழிபட்டனர். ஏற்பாடுகளை சந்தையடியூர் அய்யாவழி இறைமக்கள், விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்