ஆடி கிருத்திகை: முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2022-07-23 18:23 GMT

ஆடி கிருத்திகை

ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்தவகையில் கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலை பாலசுப்பிரமணியசுவாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், திருநீறு, மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சாமிக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஆடி கிருத்திகையையொட்டி சாமிக்கு பக்தர்கள் பால்குடமும், பால்காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று மாலையில் பாலசுப்பிரமணியசுவாமிக்கு கிருத்திகை அபிஷேகம் செய்யப்பட்டு, ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மயில்வாகனத்தில் சாமி திருவீதியுலா நடைபெற்றது. ஆடி கிருத்திகையையொட்டி நேற்று காலை முதலே கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புகழிமலை

வேலாயுதம்பாளையம் அருகே புகழிமலையில் பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத கிருத்திகையையொட்டி பக்தர்கள்பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு தயிர், இளநீர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு,தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள்கலந்துகொண்டு, சாமி தரிசனம்செய்தனர்.

பாலமலை

இதேபோல் புன்னம்சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்