கருப்பணசாமி கோவிலில் ஆடி திருவிழா
கள்ளிமந்தையம் அருகே வள்ளியக்காவலசில் கருப்பணசாமி கோவிலில் ஆடி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
கள்ளிமந்தையம் அருகே வள்ளியக்காவலசில் கன்னிமார், கருப்பணசாமி, தன்னாசியப்பன் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 27-ந்தேதி இரவு கரகம் அலங்கரித்து கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து வந்தனர். பின்னர் நேற்று முன்தினம் கன்னிமார், கருப்பணசாமி, தன்னாசியப்பன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதன்பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.