ஆடி அமாவாசை திருவிழா; தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க தீவிர சோதனை

சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-07-27 19:43 GMT

விக்கிரமசிங்கபுரம்:

சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆடி அமாவாசை திருவிழா

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து குடில் அமைத்து தங்கி சாமி தரிசனம் செய்வார்கள்.

மேலும் விழாவையொட்டி 30-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு தனியார் வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டு, அகஸ்தியர்பட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் மூலமாக மட்டும் கோவிலுக்கு செல்கின்றனர்.

தீவிர சோதனை

விழாவை முன்னிட்டு பாபநாசம் வனச்சோதனை சாவடி மற்றும் காணிக்குடியிருப்பில், கோவிலுக்கு கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ள மதுபாட்டில்கள், பாலித்தீன் பைகள், புகையிலை பொருட்கள், சோப்பு, ஷாம்பு உள்ளிட்டவற்றை பக்தர்கள் கொண்டு வருவதை தடுக்க வனத்துறையினர் மற்றும் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

அவ்வாறு சோதனையின் போது சிலர் கொண்டுவரும் மதுப்பாட்டில்கள், சோப்புகள், பாலித்தீன் பைகள் உள்ளிட்டவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்து பக்தர்களை கோவிலுக்கு அனுமதிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்