மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்
தஞ்சை மின்சார அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நானை நடக்கிறது
தஞ்சாவூர்;
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை நகர செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சை நகரிய கோட்டத்தில் உள்ள வீடு, விவசாயம், கைத்தறி மற்றும் விசைத்தறி மின் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 463 ஆகும். இவற்றில் 80 ஆயிரத்து 364 எண்ணிக்கையிலான மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 22 ஆயிரத்து 99 எண்ணிக்கை மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க மீண்டும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி, தஞ்சை மேற்கு, நீதிமன்றசாலை, மானம்புச்சாவடி, அருளானந்தநகர், ஈஸ்வரிநகர், கரந்தை, அரண்மனை ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.எனவே நகரிய கோட்டத்தில் இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் நிலுவையில் உள்ள 22 ஆயிரத்து 99 மின் நுகர்வோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.