ஆதார் சேவை மையம் செயல்பட வேண்டும்
ஆதார் சேவை மையம் செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ரிஷிவந்தியம்:
ரிஷிவந்தியம் தொகுதி மற்றும் ஒன்றியத்தின் முக்கிய இடமாக வாணாபுரம் பகண்டை கூட்ரோடு உள்ளது. இங்கு தினமும் சுற்றியுள்ள கிராம மக்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் இங்கு ஆதார் சேவை மையம் இல்லாததால் ஆதார் கார்டில் பெயர் திருத்தம், சேர்த்தல், செல்போன் எண் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு சங்கராபுரத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரியலூர் தபால் நிலையத்தில் சில மாதங்கள் மட்டுமே ஆதார் சேவை மையம் செயல்பட்டது. தற்போது அந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பகண்டை கூட்ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலோ அல்லது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலோ ஆதார் சேவை மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி கிராம மக்களின் கோரிக்கை ஆகும்.