அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை
மயிலாடுதுறை கோட்டத்தில் அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை தபால் கண்காணிப்பாளர் தகவல்
மயிலாடுதுறை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அசிப் இக்பால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மற்றும் சீர்காழி தலைமை தபால் நிலையங்களிலும், மயிலாடுதுறை-ஆர்.எஸ்., நீடூர், வைத்தீஸ்வரன்கோவில், செம்பனார்கோவில், ஆக்கூர், பொறையாறு, பூந்தோட்டம், பேரளம், கொல்லுமாங்குடி, சட்டநாதபுரம், திருவெண்காடு, மங்கைமடம், ஆணைக்காரன்சத்திரம் மற்றும் ஆச்சாள்புரம் துணை தபால் நிலையங்களிலும் ஆதார் புதிதாக எடுத்தல் மற்றும் புதுப்பித்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் அனைத்து அஞ்சலக வேலை நாட்களிலும் வழங்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.