மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு 2 கோடியை தாண்டியது...!
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது.
சென்னை,
மின் மானியம் பெறும் இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மாநில அரசுகளை, மத்திய அரசு அண்மையில் அறிவுறுத்தியது. அதன்படி, மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,816 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டதும் பலரும் அவசர அவசரமாக ஆன்லைன் மூலமாக ஆதார் எண்ணை இணைத்தனர்.
இந்த நிலையில், ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை வரும் 31-ம் தேதி வரை இணைக்கலாம் என அரசு கால அவகாசத்தை நீட்டித்திருக்கிறது. இந்தநிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியை கடந்தது. சுமார் 75% பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.