ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்

மின்வாரிய அலுவலகங்களில் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2022-12-01 18:31 GMT

தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு, மின் கட்டணம் செலுத்தும் மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆற்காடு நகரம், கிராமியம், திமிரி, கலவை, மாம்பாக்கம் உள்ளிட்ட 14 இடங்களில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைக்க மின் நுகர்வோர்கள் ஆர்வமுடன் வந்து ஆதார் எண்களை இணைத்தனர். இதற்காக தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்