11 லட்சம் பேரின் ஆதார் எண் இணைப்பு

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் 11 லட்சம் பேரின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-15 18:45 GMT

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் 11 லட்சம் பேரின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் இணைக்கும் பணி

ஒரே வாக்காளரின் விபரங்கள் வெவ்வேறு இடங்களில் இருப்பதை தவிர்க்கும் வகையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் படிவம் 6பி யில் ஆதார் எண் பூர்த்தி செய்து அந்தந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர் அல்லது ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது

.கோவை மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்து 94 ஆயிரம் பேர் தங்களது வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண் விவரங்களை இணைத்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணி நேற்று தொடங்கியது.

இதில் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 58 ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியதாவது:-

இலக்கு நிர்ணயம்

கோவை மாவட்டத்தில் 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை 10 லட்சத்து 94 ஆயிரம் பேர் தங்களது ஆதார் எண் விபரங்களை, வாக்காளர் பட்டியலுடன் இணைத்து உள்ளனர்.

வருகிற மார்ச் மாதத்திற்குள் வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை 100 சதவீதம் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

இதற்காக கோவை மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று ஆதார் எண்ணுடன், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைக்கும் பணியில் 3,058 ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வீடு வீடாக சென்று எண்களை இணைத்து வருகின்றனர்.

எனவே வாக்காளர்கள் தங்களது பகுதிக்கு வரும் ஊழியர்களிடம் ஆதார் எண் விவரங்களை அளித்து ஒத்துழைக்க வேண்டும்.

இது தவிர voter helpline என்ற செல்போன் செயலி மூலம் பொது மக்கள் தாங்களாகவே வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்