கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் பதிவு சேவை மையத்தில் குவிந்தவர்களால் பரபரப்பு

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் பதிவு சேவை மையத்தில் குவிந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-19 18:45 GMT

நாகர்கோவில், 

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் பதிவு சேவை மையத்தில் குவிந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதார் பதிவு சேவை மையம்

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பக்க வாயில் பகுதியிலும், அலுவலக வளாகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலக பகுதியிலும் ஆதார் பதிவு சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த சேவை மையங்களில் கடந்த சில நாட்களாக கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. புதிதாக ஆதார் பதிவு செய்வதற்கும், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம், புதுப்பித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

இதனால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் சனிக்கிழமையான நேற்று அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் பதிவு சேவை மையத்தில் நேற்று ஆண்களும், பெண்களும், மாணவ- மாணவிகளும் என கூட்டமாக இருந்ததை காண முடிந்தது. இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய சென்றனர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் ஆதார் சேவை மையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களில் சிலர் புதிதாக ஆதார் பதிவு செய்வதற்காகவும், சிலர் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் போன்ற பணிகளுக்காக காத்திருந்தார்கள். அதேநேரத்தில் கலெக்டர் அலுவலக முன்பகுதியில் உள்ள ஆதார் சேவை மையத்தில் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் கிடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்