தொண்டியில் ஆதார் மையம்

தொண்டியில் ஆதார் மையம் அமைக்கப்படும் என பேரூராட்சி தலைவர் கூறினார்.

Update: 2023-03-16 18:45 GMT

தொண்டி, 

தொண்டி பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தொண்டியை சுற்றிலும் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களை சேர்ந்த மக்கள் தினமும் தங்களது அன்றாட பணிகளுக்காக இங்கு வந்து செல்கின்றனர். இப்பகுதி மக்கள் புதிதாக ஆதார் அட்டை பெறுவதற்கும், திருத்தம் செய்வதற்கும் திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான், கலெக்டர் ஜானி டாம் வர்கீசை நேரில் சந்தித்து தொண்டியில் ஆதார் சேவை மையம் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் தொண்டியில் ஆதார் சேவை மையம் அமைத்திட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தொண்டி பேரூராட்சி பாவோடி மைதானம் பகுதியில் ஆதார் சேவை மையம் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலி கான் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்