ஆதார் அட்டை திருத்த சிறப்பு முகாம்

கே.வி.குப்பம் அருகே ஆதார் அட்டை திருத்த சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2022-06-30 13:43 GMT

கே.வி.குப்பம் தாலுகா கீழ்ஆலத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இ.சேவை மையக் கட்டிடத்தில் கிராம மக்களுக்கான ஆதார் அட்டை திருத்தம், புதிய பதிவுகள், கைபேசி எண் சேர்த்தல் போன்ற சேவைகளுக்கான 3 நாள் சிறப்பு முகாம் தொடங்கியது.

தொடக்க நிகழ்ச்சியில் குடியாத்தம் தபால் நிலைய தலைமை அதிகாரி சி.நெடுஞ்செழியன், தபால் துறை வணிக மேலாளர் கே.ராஜேஷ், கீழ்ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்