மது விற்ற வாலிபர் கைது

பெரியகுளம அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-12-11 18:45 GMT

பெரியகுளம் அருகே தெய்வேந்திரபுரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனை செய்தனர். அப்போது பையில் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை நடத்தியதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி (வயது 34) என்பதும், மது விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 45 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்