ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஜம்புகுளம் மலை அடிவாரத்தில் சாராயம் விற்பதாக சோளிங்கர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் மோகன், தனிப்பிரிவு ஏட்டு மகேந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது சாராயம் விற்றுக்கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில், சித்தூர் மாவட்டம் பாலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன் (வயது 34) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.