மது விற்ற வாலிபர் கைது

நாகர்கோவிலில் மது விற்ற வாலிபர் கைது;

Update: 2022-07-20 20:16 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்றுமுன்தினம் இரவு ஆம்னி பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் மேலபுத்தேரியை சேர்ந்த சொக்கலிங்கம் (வயது 30) என்பதும், அங்கு மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்