மது விற்ற வாலிபர் கைது
நெல்லையில் மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை முன்னீர்பள்ளம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முன்னீர்பள்ளம் அருகே பிராஞ்சேரி பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பிராஞ்சேரி காமராஜர் காலனி தெருவை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 34) என்பதும், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ய வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.