வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஆலம்பாளையம்புத்தூரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் பிரபு (வயது 30). இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். ஒரு மாதத்திற்கு இரண்டு முறை மட்டும் வீட்டிற்கு வருவது வழக்கம். கடந்த 11-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு கேரளாவுக்கு வேலைக்கு சென்றார். பின்பு கடந்த 23-ந் தேதி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1½ பவுன் நகை திருடப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில்காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து திருடியதாக அதே பகுதியைச் சேர்ந்த சொக்கன் என்ற சொக்கலிங்கம் (26) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நகை மீட்கப்பட்டது.