மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
திருவண்ணாமலையில் மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
திருவண்ணாமலை எடப்பாளையம் 1-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் பவுன்குமார் (வயது 29).
இவரும், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் சம்பத் என்பவரும் மோட்டார்சைக்கிளில் நேற்று இரவு திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார்சைக்கிளை சம்பத் ஓட்டியதாக கூறப்படுகிறது. திருக்கோவிலூர் சாலையில் உள்ள ஒரு ரைஸ்மில் அருகில் சென்றபோது மோட்டார்சைக்கிள் திடீரென நிலைத்தடுமாறி சரிந்து விழுந்தது.
அதில் பவுன்குமாருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே பவுன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.