கூடலூரில் கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்

கூடலூரில் கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்

Update: 2023-08-16 19:00 GMT

கூடலூர்

நீலகிரி மாவட்டம் கூடலூர் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான் தலைமையிலான போலீசார் சாஸ்தாபுரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்திய போது முண்ணுக்கு பின் முரணாக பதில் அளித்தார் அவரிடம் இருந்த பையை சோதனை செய்ததில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் அவர் கேரள மாநிலம் திருவாலி பகுதியை சேர்ந்த ஹனிபா (வயது 23) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்