தூத்துக்குடியில்மூதாட்டியிடம் 5½ பவுன் தங்கசங்கிலி பறித்த வாலிபர் கைது

தூத்துக்குடியில்மூதாட்டியிடம் 5½ பவுன் தங்கசங்கிலி பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-22 18:45 GMT

தூத்துக்குடியில் மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிளில் வந்து 5½ பவுன் தங்கசங்கிலி பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தங்கசங்கிலி பறிப்பு

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமுவேல். இவருடைய மனைவி ஜெயசீலி (வயது 70). இவர் கடந்த 5.8.2023 அன்று அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஜெயசீலியின் கழுத்தில் கிடந்த 5 ½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.

கைது

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், தூத்துக்குடி முள்ளக்காடு சந்தோஷ் நகரை சேர்ந்த ராமன் மகன் ராஜேஷ் (39) என்பவர், மூதாட்டி ஜெயசீலியிடம் இருந்து தங்கசங்கிலியை பறித்து சென்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் ராஜேசை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள 5 ½ பவுன் தங்க சங்கிலி மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்