வனவிலங்குகளை வேட்டையாடநாட்டு துப்பாக்கியுடன் சென்ற வாலிபர் கைது
வனவிலங்குகளை வேட்டையாடநாட்டு துப்பாக்கியுடன் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை,
எலவனாசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் இறையூர் கிராமத்திலிருந்து அதையூர் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள காட்டு கோவில் பகுதியில் கையில் நாட்டு துப்பாக்கியுடன் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் இறையூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் கிளி என்கிற லியோ பிரகாஷ் (வயது 26) என்பதும், அப்பகுதியில் உள்ள காப்புக்காட்டில் வனவிலங்குகளை சட்டத்தை மீறி வேட்டையாட சென்றதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.