கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-30 19:37 GMT

கரூர் பசுபதிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வைகுந் (வயது 26). இவர் நரி கட்டியூர் அருகே உள்ள ஒரு பள்ளி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, சணப்பிரட்டையை சேர்ந்த அசோக்குமார் (33) என்பவர் வைகுந்திடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். இதுகுறித்து வைகுந் கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி வழக்குப்பதிந்து, அசோக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்