குள்ளஞ்சாவடியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

குள்ளஞ்சாவடியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.;

Update: 2023-08-11 18:45 GMT

குள்ளஞ்சாவடி,

பண்ருட்டியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் காலை குள்ளஞ்சாவடி நோக்கி அரசு டவுன் பஸ் புறப்பட்டது. பஸ்சில் டிரைவராக ஜான் சம்பத் குமாரும், கண்டக்டராக மாணிக்க வேலும் பணியாற்றினர். கட்டியங்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் டிரைவர் பயணிகளை ஏற்றி, இறக்கினார். அப்போது பஸ்சில் ஏறிய, குள்ளஞ்சாவடி அருகே உள்ள பெரியகாட்டுசாகையை சேர்ந்த அமர்நாத் மகன் சிலம்பரசனிடம்(வயது 23) கண்டக்டர் மாணிக்கவேல் டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு சிலம்பரசன், மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் கண்டக்டருக்கும், சிலம்பரசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்குள் பஸ், குள்ளஞ்சாவடி ரெயில்வே கேட் அருகே வந்தததும், சிலம்பரசனை கண்டக்டர் பஸ்சில் இருந்து இறக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன், கீழே கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் பின்புறம் வீசினார். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து சேதமடைந்ததுடன், பஸ்சில் இருந்த பெண் பயணி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. உடனே அவர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து டிரைவர் ஜான் சம்பத் குமார் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்