கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண்

2 குழந்தைகளை தவிக்க விட்டு, கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண்ணால் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-06 18:05 GMT

குலசேகரம்:

2 குழந்தைகளை தவிக்க விட்டு, கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண்ணால் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

இளம்பெண்

குலசேகரம் அருகே உள்ள அண்ணாநகர், சானல்கரை பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு 26 வயது மனைவியும், 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர்.

தொழிலாளியின் மனைவி மார்த்தாண்டம் பகுதியில் ஒரு தனியார் செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். அந்த கடைக்கு திண்டுக்கல்லை சேர்ந்த வாலிபர் ஒருவர் வந்தார். அவர் ஆற்றூர் பகுதியில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்ததால், அடிக்கடி செல்போன் கடைக்கு வந்தார். அப்போது இளம்பெண்ணுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இளம்பெண்ணின் செல்போன் எண்ணை வாலிபர் பெற்றுக்கொண்டு தொடர்ந்து பேசி வந்தார். அந்த வாலிபர் ஏற்கனவே திருமணம் ஆகி, மனைவியை விவாகரத்து செய்தவர் ஆவார்.

கள்ளக்காதல்

இதனால் இளம்பெண்ணின் பேச்சில் வாலிபர் மயங்கினார். இந்த பழக்கம் அவர்களிடையே கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். இதை தொழிலாளி கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வாலிபருடன் ஓடி விட்டார்.

பின்னர் ஒரு வாரம் கழித்து இளம்பெண்ணை கண்டுபிடித்து அழைத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் கணவர் வேலைக்கு சென்ற பிறகு 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, மீண்டும் இளம்பெண் கள்ளக்காதலனுடன் சென்றார். கணவர் வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவியையும், 2 குழந்தைகளையும் காணாமல் திடுக்கிட்டார்.

மீட்பு

இதுபற்றி குலசேகரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடி வந்தனர். அவர்களின் செல்போன் எண்ணை வைத்து பார்த்த போது, இளம்பெண் கள்ளக்காதலனுடன் நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் இருப்பது தெரிய வந்தது. உடனே உள்ளூர் போலீசார் உதவியுடன் அவர்களை குலசேகரம் போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் மாலையில் அழைத்து வந்தனர்.

இதுபற்றி அறிந்ததும், இளம்பெண்ணின் கணவர் மற்றும் பெற்றோர் போலீஸ் நிலையம் வந்தனர். அப்போது போலீசார் கணவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது முதலில், அவர் மனைவியை ஏற்று கொள்ள மாட்டேன் என்று கூறினார். அதன் பிறகு போலீசார் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் கருதி மனைவியை ஏற்று கொள்வது என்று முடிவு செய்தார். ஆனால் இளம்பெண் கணவருடன் செல்ல மாட்டேன். கள்ள காதலனுடன் தான் செல்வேன் என்று அடம் பிடித்தார். போலீசாரும் பெற்றோர்களும் பேச்சுவார்த்தை நடத்தியும் இளம்பெண் முடிவை மாற்றவில்லை,

பாச போராட்டம்

அதன் பிறகு குழந்தைகள் அம்மாவிடம் எங்களுடன் சேர்ந்து வாழ வாருங்கள் என்று பாச போராட்டம் நடத்தினர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் இளம்பெண் மனம் மாறாமல், இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு, கள்ள காதலுடன் காரில் ஏறி சென்றார். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் கணவரின் பாதுகாப்பில் குழந்தைகளை வளர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி போலீசார் குழந்தைகளை தந்தையுடன் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்