கணவரை ஏமாற்றி பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண்

கோவையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கணவரை ஏமாற்றி பல ஆண்களுடன் உல்லாசமாக இளம்பெண் இருந்துள்ளார். அவரை கணவர் தட்டிக்கேட்டதால் குழந்தைகளை தவிக்கவிட்டு ஓட்டம் பிடித்தார்.

Update: 2022-09-28 18:45 GMT

கோவை

கோவையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கணவரை ஏமாற்றி பல ஆண்களுடன் உல்லாசமாக இளம்பெண் இருந்துள்ளார். அவரை கணவர் தட்டிக்கேட்டதால் குழந்தைகளை தவிக்கவிட்டு ஓட்டம் பிடித்தார்.

இளம்பெண்

கோவை அருகே உள்ள கே.ஜி.சாவடி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 26 வயதான இளம்பெண்ணுக்கு திருமணமாகி கணவர், 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய கணவர், ரெயில்வேயில் ஊழியராக வேலை செய்து வருகிறார். திருமணமான சில நாட்களிலேயே அந்த இளம்பெண் தான் வீட்டில் தனியாக இருப்பதால் வேலைக்கு செல்கிறேன் என்று கணவரிடம் கூறி உள்ளார். அதற்கு அவர் அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் அவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. அதன் பின்னர் அந்த இளம்பெண் தனது கணவரிடம் நான் வேலைக்கு செல்கிறேன் என்று மீண்டும் கூறி உள்ளார். அதற்கு அவரும் அனுமதி கொடுத்தார். அதன்படி அந்த இளம்பெண் தான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டதாக கணவரிடம் தெரிவித்ததாக தெரிகிறது.

மசாஜ் சென்டர்

ஆனால் அந்த இளம்பெண் நாட்கள் செல்ல, செல்ல தினமும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவு 11 மணிக்குதான் வீட்டுக்கு வந்துள்ளார். அதை அந்த இளம்பெண்ணின் கணவர் கேட்டு உள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பின்னர் நாளடைவில் அந்த இளம்பெண் வீட்டுக்கு நள்ளிரவுக்கு மேல் வருவதை வழக்கப்படுத்தி உள்ளார். அப்படி வீட்டுக்கு வரும்போது மிகவும் சோர்வடைந்த நிலையில் இருப்பது உண்டு.

இதனால் சந்தேகம் அடைந்த கணவர், தனது மனைவிக்கு தெரியாமல் அவர் எங்கு வேலைக்கு செல்கிறார், வேலை முடிந்து என்ன செய்கிறார் என்பதை கண்காணித்தார். அப்போது அந்த இளம்பெண் ஒரு மசாஜ் சென்டரில் வேலை செய்து வந்ததையும், அங்கு வரும் பல ஆண்களுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதையும் அவர் கண்டுபிடித்தார்.

தட்டி கேட்டார்

தொடர்ந்து கண்காணித்தபோது, மசாஜ் சென்டரில் வேலை முடிந்ததும், அந்த இளம்பெண், அங்கு வரும் ஆண்களிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு வெளியே சென்று உல்லாசமாக இருந்துவிட்டு நள்ளிரவில் வீட்டுக்கு வருவது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் தனது மனைவியிடம் தட்டிக்கேட்டார்.

நான் கைநிறைய சம்பளம் வாங்குகிறேன், நமக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர், எனவே இந்த விஷயம் வெளியே தெரிந்தால் நமக்குதான் அவமானம், எனவே நீ வேலைக்கு செல்ல வேண்டாம், பிற ஆண்களுடன் இருக்கும் தொடர்பை நிறுத்திவிடு என்று கூறி கெஞ்சி உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது.

ஓட்டம்

இந்த நிலையில் அந்த இளம்பெண் தான் வேலைக்கு செல்வதாகவும், ஆண்களுடன் உள்ள தொடர்பை விட்டுவிடுவதாகவும் கூறினார். இதையடுத்து வேலைக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்ற அந்த இளம்பெண், வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

அக்கம் பக்கத்தினர், உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த இளம்பெண்ணின் கணவர் இது குறித்து கே.ஜி.சாவடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்