வீடு புகுந்து நகை பறித்த இளம்பெண் கைது

அருப்புக்கோட்டை அருகே வீடு புகுந்து நகை பறித்த இளம்பெண் கண்காணிப்பு கேமரா காட்சியால் சிக்கினார்.

Update: 2022-09-18 18:44 GMT

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே வீடு புகுந்து நகை பறித்த இளம்பெண் கண்காணிப்பு கேமரா காட்சியால் சிக்கினார்.

மிளகாய் பொடி தூவி..

அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மனைவி தீபா (வயது 46) இவர்களுடைய மகள் ஆர்த்தி. வீட்டில் தனியாக இருக்கும்போது வீட்டிற்குள் நுழைந்த பெண் ஒருவர் ஆர்த்தியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினார்.

பின்னர் அந்த பெண், ஆர்த்தியின் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இளம்பெண் கைது

அப்போது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு. கேமரா பதிவுகளை ஆராய்ந்து பார்த்ததில் அதில் அதே ஊரைச் சேர்ந்த பரத் என்பவர் மனைவி ஜானகி (23) என்பவர் சம்பவம் நடந்த பகுதியில் சந்தேகப்படும்படியான வகையில் நடந்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் ஜானகியிடம் நடத்திய விசாரணையில் மிளகாய் பொடி தூவி நகையை பறித்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து நகையை பறிமுதல் செய்த போலீசார் ஜானகியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்