சூளகிரி:-
சூளகிரியில் காதலன் திருமணத்துக்கு மறுத்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இளம்பெண்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா முதுகுறுக்கி அருகே பி.சிகிரிப்பள்ளியை சேர்ந்தவர் எல்லப்பா. இவருடைய மகள் யசோதா (வயது 19). இவர் கடத்தூரை சேர்ந்த பிரதீப் என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டுக்கும் தெரிய வந்தது. இரு வீட்டிலும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். திருமண ஏற்பாடுகளும் நடந்து வந்ததாக தெரிகிறது.
தற்கொலை
இதற்கிடையே பிரதீப் திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறி திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த யசோதா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காதலன் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.