ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை ரோட்டில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் காசிமாயன் (வயது 29). இவரது தங்கை பவித்ரா (23). இவரை தட்டச்சு வகுப்பு முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்து சென்றார். அப்போது மதுரை ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த பஸ், மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் பவித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பவித்ராவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த காசிமாயன் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து பஸ் டிரைவர் பாலசுப்பிரமணியத்தை (46) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.