தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்

வேதாரண்யம் அருகே திருட்டு வழக்கில் தேடி வந்த நிலையில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2023-03-10 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே திருட்டு வழக்கில் தேடி வந்த நிலையில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூக்கல் தொங்கிய வாலிபர்

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் வடகாடு அய்யனார் கோவில் அருகே உள்ள முந்திரி காட்டில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் அழுகிய நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருட்டு வழக்கில் தேடப்பட்டவர்

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தூக்கில் பிணமாக தொங்கியவர் கருப்பம்புலம் மேலக்காட்டை சேர்ந்த வடிவேல் மகன் வெங்கடாஜலபதி (வயது25) என்பது தெரிய வந்தது.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பம்புலம் மேலக்காட்டை சேர்ந்த தங்கராசு என்பவரது வீட்டில் நடந்த திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் வெங்கடாஜலபதியை போலீசார் தேடி வந்ததும் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்