திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை கொன்று இளைஞர் தற்கொலை

திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை கொன்று இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2024-10-10 21:52 IST

சிவகங்கை,

சிவகங்கை அருகே திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியைச் சேர்ந்தவர் மோனிஷா. இவர் சிவகங்கையிலுள்ள அரசு கலைக் கல்லூரியில் பயின்று வந்தார். சிங்கம்புணரி பிரான்மலை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் மோனிஷாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மோனிஷாவின் வீட்டிற்கு சென்ற ஆகாஷ், அவரை திருமணம் செய்து வைக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை மோனிஷாவின் வீட்டார் விரட்டியடித்துள்ளனர். இருப்பினும் ஆகாஷ் மீண்டும் மீண்டும் மோனிஷாவை சந்தித்து தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மோனிஷாவை சந்தித்த ஆகாஷ், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு மோனிஷா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஆகாஷ் வீட்டில் இருந்த அரிவாள்மனையால் மோனிஷாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அருகில் கிடந்த பீர் பாட்டிலால் தன்னையும் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்