17 வயது சிறுவனை கடத்தி காதல் திருமணம் செய்த இளம்பெண்

17 வயது சிறுவனை கடத்தி இளம்பெண் காதல் திருமணம் செய்துள்ளார்.;

Update:2024-09-05 09:53 IST

வேலூர்,

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் அதே பகுதியில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் பணியாற்றினார். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த இளம்பெண் சிறுவனை கடத்திச்சென்று யாருக்கும் தெரியாமல் கோவிலில் திருமணம் செய்து கொண்டு வெளியூருக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியவரவே இந்த திருமணம் குறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு இலவச உதவி எண் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் பேரணாம்பட்டு சமூக நலத்துறை விரிவு அலுவலர் மற்றும் குடியாத்தம் போலீசார் சிறுவனை திருமணம் செய்து கொண்ட இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்