இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம் ஆனார்

Update: 2022-12-12 18:46 GMT

தோகைமலை அருகே உள்ள போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி செம்பாறைப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். லாரி டிரைவர். இவரது மனைவி கார்த்திகா (வயது 21). இந்தநிலையில் சம்பவத்தன்று கார்த்திக் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த கார்த்திகாவை காணவில்லை. இதையடுத்து கார்த்திக் தனது மனைவியை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கார்த்திகாவின் தாய் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான கார்த்திகாவை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்