நொய்யல் தேர்வீதி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் நிவேதாஸ்ரீ (வயது 22). இவர் பிளஸ-2 வரை படித்துவிட்டு வீட்டில் தையல் மிஷின் வைத்து துணிகளை தைத்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்த நிவேதாஸ்ரீ வெளியில் சென்று வருவதாக கூறி சென்றவர் இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நிவேதாஸ்ரீ தாயார் மகேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.