கடன் கொடுத்தவர் தாக்கியதால் விஷம் குடித்த தொழிலாளி

கடன் கொடுத்தவர் தாக்கியதால் தொழிலாளி விஷம் குடித்தார்.;

Update: 2023-04-11 20:32 GMT

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் அருகே உள்ள சின்ன சூரியூரை சேர்ந்தவர் பிச்சை(வயது 45). கூலித்தொழிலாளியான இவர் மண்டையூர் அருகே உள்ள வடூவூர் பகுதியை சேர்ந்த பழனியப்பனிடம் வட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதில் ரூ.70 ஆயிரத்தை திருப்பி செலுத்தியுள்ளார். இந்நிலையில் பிச்சை அவரது நண்பர் ஒருவருக்கு பழனியப்பனிடம் இருந்து வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரது நண்பர் சரியாக அசலும். வட்டியும் கட்டாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் பிச்சை தான் கொடுக்க வேண்டிய ரூ.30 ஆயிரத்திற்குரிய வட்டியை செலுத்துவதற்காக நேற்று காலை பழனியப்பன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பிச்சையின் நண்பர் ஒழுங்காக வட்டியும் செலுத்தவில்லை, அசலும் செலுத்தவில்லை என்று கூறி பழனியப்பன் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பிச்சையை பழனியப்பன் செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பிச்சை வீட்டிற்கு வந்து வயலுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்துள்ளார். இதை பார்த்த பிச்சையின் குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசில் பிச்சை கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்