தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயில் மோதி சாவு

அரக்கோணம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயில் மோதி பலியானார்.

Update: 2023-06-19 17:48 GMT

அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருத்தணியை அடுத்த பொன்பாடி ரெயில் நிலையத்திற்கு அருகே அதே பகுதியை சேர்ந்த ராஜு (வயது 47) என்பவர் அந்தப் பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்த போது அங்கிருந்த ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்