காட்டாங்கொளத்தூர் அருகே கிணறு தோண்டும்போது ஜெலட்டின் குச்சி வெடித்து தொழிலாளி படுகாயம்
காட்டாங்கொளத்தூர் அருகே கிணறு தோண்டும்போது ஜெலட்டின் குச்சி வெடித்து தொழிலாளி படுகாயம் அடைந்தார்.;
ஜெலட்டின் குச்சி வெடித்தது
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி சார்பில் காட்டாங்கொளத்தூர் அருகே கொருக்கந்தாங்கல் பகுதியில் கிணறு வெட்டும் பணியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் (வயது 46), அவரது மகன் வெங்கடேஷ் (வயது 26) ஆகியோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டிருந்தனர். நேற்று கிணறு வெட்டுவதற்கு 8 ஜெலட்டின் குச்சிகளை வாங்கி வைத்திருந்தனர். அங்கு கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் எந்திரம் திடீரென ஜெலட்டின் குச்சி மீது அழுத்தியதால் ஜெலட்டின் குச்சி வெடித்தது.
படுகாயம்
இதில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஆனந்த் (வயது 46) பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.