போலீஸ்காரர் ஓட்டி வந்த கார் மோதி தொழிலாளி பலி

திருவண்ணாமலை அருகே போலீஸ்காரர் ஓட்டி வந்த கார் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2023-10-01 17:49 GMT

திருவண்ணாமலை அருகே போலீஸ்காரர் ஓட்டி வந்த கார் மோதி தொழிலாளி பலியானார்.

தொழிலாளி

திருவண்ணாமலை வாணியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 30). தொழிலாளியான இவர் கடந்த 27-ந் தேதி வாணியந்தாங்கல் கிளிநகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் விஜய் (16) மற்றும் சிலருடன் சென்டிரிங் வேலைக்கு சென்று இருந்தார்.

அன்று மாலையில் வேலை முடித்து மகாதேவனும், விஜய்யும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இவர்கள் ஆலத்தூர் பெட்ரோல் பங்க் அருகில் செல்லும் போது, எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மகாதேவனுக்கும், விஜய்க்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீஸ் டிரைவர்

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை ஓட்டி வந்தது ஆயுதப்படையில் போலீஸ் டிரைவராக உள்ள செங்கத்தை சேர்ந்த ரவி என்பது தெரியவந்தது.

இதற்கிடையில் மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிசிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்