சிறுவன் ஓட்டிய கார் மோதி தொழிலாளி பலி
கபிஸ்தலம் அருகே சிறுவன் ஓட்டிய கார் மோதி தொழிலாளி பலியானார்.
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் சம்பவத்தன்று திருவையாறு-கும்பகோணம் மெயின் ரோட்டில் தங்களுக்கு சொந்தமான காரை ஓட்டி பயிற்சியில் ஈடுபட்டார். தஞ்சையை அடுத்த கணபதி அக்ரஹாரம் பிள்ளையார் கோவில் அருகில் கார் வந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ராமஜெயம்(வயது 56) என்பவர் மீது சிறுவன் ஓட்டி வந்த கார் மோதியது.
சிறுவன் கைது
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ராமஜெயம் பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமஜெயத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான 17வயது சிறுவனை கைது செய்ததுடன் காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.