தூத்துக்குடி அருகே பஸ்- லோடு ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

தூத்துக்குடி அருகே பஸ்- லோடு ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

Update: 2023-10-13 18:45 GMT

தூத்துக்குடி அருகே பஸ்- லோடு ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

அரசு பஸ்

தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு நேற்று அதிகாலை 5 மணி அளவில் அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை ஓட்டப்பிடாரம் கப்பிக்குளத்தை சேர்ந்த மகேஷ் (வயது 37) ஓட்டிச் சென்றார்.

கடந்த சில நாட்களாக தூத்துக்குடி- நெல்லை சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஒருவழிப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டு உள்ளன. எனவே பஸ், தூத்துக்குடி அருகே மறவன்மடம் அருகில் வலதுபுறமாக ஒருவழிப்பாதையில் சென்று கொண்டிருந்தது.

லோடு ஆட்டோ மோதியது

இதற்கிடையே தூத்துக்குடி அருகே செக்காரக்குடியைச் சேர்ந்த தொழிலாளர்கள் 7 பேர், அதிகாலையில் லோடு ஆட்டோவில் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டுக்கு புறப்பட்டு சென்றனர். அந்த லோடு ஆட்டோவை பேச்சிமுத்து ஓட்டி சென்றார்.

மறவன்மடம் அருகில் சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக லோடு ஆட்டோ நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

தொழிலாளி பலி

இதில் லோடு ஆட்டோவில் வந்த செக்காரக்குடியை சேர்ந்த தொழிலாளர்களான சுடலை (வயது 50), பேச்சிமுத்து (24), ஊர்க்காவலன் (47), முருகபெருமாள் (49), கார்த்திக்ராஜா (22) மற்றும் பஸ் கண்டக்டர் வெள்ளைச்சாமி (42), பஸ் பயணி சந்திரசேகர் (51) ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முருகபெருமாள் பரிதாபமாக இறந்தார். மற்ற 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்