அறுந்து கிடந்த வயரை அகற்றமுயன்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

தெருவில் அறுந்து கிடந்த வயரை எடுத்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

Update: 2022-07-27 11:38 GMT

தூசி

தெருவில் அறுந்து கிடந்த வயரை எடுத்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

செய்யாறு தாலுகா உக்கல் கிராமம் குட்டைகரை தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). விவசாயக் கூலி தொழிலாளி இவர் நேற்று மாலை வீட்டின் முன்பு அருந்து கிடந்த மின்சார வயரை அகற்ற முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் சங்கரை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள்பரிசோதனை செய்தபோது சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சங்கரின் மனைவி கவுரி, தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவருக்கு வெற்றிவேல் (19), செல்வம் (17) உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்