6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற தொழிலாளி கைது

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற தொழிலாளிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்

Update: 2022-08-14 16:17 GMT

காட்பாடியை அடுத்த கிளித்தான்பட்டரை பகுதியை சேர்ந்தவர் அப்துல்கனி (வயது 56). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 1-ம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியை அழைத்து ஜூஸ் வாங்கி கொடுத்தார். பின்னர் மது போதையில் இருந்த அவர் அந்த சிறுமியை ஒதுக்குப்புறமாக உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இதனை பார்த்த அக்கம்பத்தினர் அப்துல்கனியை தொடர்ந்து சென்று விசாரித்தனர். அப்போது அவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க இருந்தது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவருக்கு தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை காட்பாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்