தோல் தொழிற்சாலையில் தொழிலாளி 'திடீர்' சாவு

ராணிப்பேட்டை அருகே தோல் தொழிற்சாலையில் தொழிலாளி ‘திடீர்’ என இறந்தார்.

Update: 2023-10-12 18:48 GMT

ராணிப்பேட்டை அருகே அம்மூர் மேட்டுக்காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). இவர் ராணிப்பேட்டை அருகே வி.சி.மோட்டூரில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்