தனியார் தோட்டத்தில் பிணமாக கிடந்த தொழிலாளி
தனியார் தோட்டத்தில் பிணமாக கிடந்த தொழிலாளி
கோமங்கலம்
பொள்ளாச்சி அருகே கோமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து கோமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர், அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கிட்டான் (வயது 53) என்பதும், இரவு நேரங்களில் முயல் வேட்டைக்கு செல்வது வழக்கம் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர், நேற்று முன்தினம் இரவில் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்திற்கு முயல் வேட்டைக்கு சென்றபோது, மழை பெய்து கொண்டிருந்ததால் மின்னல் தாக்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே முழுவிவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடலை மீட்டு கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.