வீட்டில் பிணமாக கிடந்த தொழிலாளி

மூன்றடைப்பு அருகே தொழிலாளி வீட்டில் பிணமாக கிடந்தார்.

Update: 2022-08-21 17:55 GMT

நாங்குநேரி:

மூன்றடைப்பு அருகே உள்ள மருதகுளத்தை சேர்ந்தவர் மாடசாமி (வயது 60). கூலித்தொழிலாளியான இவர் ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாடசாமியின் வீடு பூட்டி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் மூன்றடைப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை திறந்து பார்த்த  போது அங்கு மாடசாமி பிணமாக கிடந்தார். இதையடுத்து போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்