வத்தலக்குண்டு அருகே பஸ் மோதி கட்டிட தொழிலாளி பலி

வத்தலக்குண்டு அருகே பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டிட தொழிலாளி பலியானார்.

Update: 2023-01-07 20:30 GMT

வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் இருளப்பன் (வயது 36). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சரசுவதி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இருளப்பன் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வத்தலக்குண்டுவுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் அங்கிருந்து அவர் பழைய வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பெரியகுளம் சாலையில், பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் அவர் வந்தபோது, எதிரே வந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட இருளப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்