சுசீந்திரம் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

சுசீந்திரம் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-10-24 18:45 GMT

சுசீந்திரம் அருகே உள்ள ஆண்டார்குளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராசையா (வயது 68), கூலி தொழிலாளி. இவர் கடந்த 5 வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று ராசையா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவரின் மனைவி மேரிலதா மற்றும் மகள் கோவிலுக்கு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் வீட்டுக்கு வந்தபோது ராசையாவை காணவில்லை. அவரை வீட்டினுள் தேடிப்பார்த்தபோது, குளியறையில் மண்எண்ணெயை தன் உடலில் ஊற்றி தீக்குளித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மோிலதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராசையா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராசையாவின் மனைவி மேரிலதா சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்