மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பலி

திருவையாறு அருகே மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பொக்லின் எந்திரம் மோதி உயிரிழந்தார்.

Update: 2023-09-23 21:34 GMT

திருவையாறு;

பாபநாசம் தாலுகா, கணபதிஅக்ரஹாரம் தெற்கு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது32). இவர் சம்பவத்தன்று தனது தாய் மணிமேகலையுடன் (50) மோட்டார் சைக்கிளில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்று மாத்திரைகளை வாங்கினர். பின்னர் மோட்டார் சைக்கிளில் தாய் மணிமேகலையுடன் களிமேடு ரவுண்டானா பைபாஸ் வழியாக மணக்கரம்பைக்கு வந்து கொண்டிருந்தார்.மணக்கரம்பை பைபாஸ் சாலையில் பொக்லைன் எந்திரம் மூலம் சாலை பணிகள் நடைபெற்றுவந்தது. மெயின்ரோட்டில் அசோக்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வந்த போது சாலை பணியில் ஈடுபட்டிருந்த பொக்லின் எந்திரம் அசோக்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மணிமேகலை சம்பவ இடத்திலேயே இறந்தார். அசோக்குமார் படுகாயமடைந்தார்.இது குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்