நகைக்கடையில் வளையல்கள் திருடிய பெண்

நகைக்கடையில் வளையல்கள் திருடிய பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-07-09 19:00 GMT

நெல்லை வண்ணார்பேட்டையில் பிரபல நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் மேலாளர் மகேஷ் (வயது 42) என்பவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், எங்கள் கடையில் தினமும் இரவு கடையை அடைக்கும் முன்பு, அன்றைய நாள் விற்பனை செய்யப்பட்ட நகைகள் குறித்தும், நகைகள் இருப்பு குறித்தும் சரிபார்ப்போம். அப்போது சுமார் 20 கிராம் தங்க வளையல்கள் 2 காணாமல் போனது தெரியவந்தது. இதனால் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தோம். அதில் பெண் ஒருவர் கடைக்கு நகைகள் வாங்க வந்துள்ளார். அவர் யாரும் பார்க்காத நேரத்தில் தங்க வளையல்களை திருடிக்கொண்டு தப்பிச்சென்றது தெரியவந்தது என தெரிவித்தார்.

இதுகுறித்து குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி வழக்குப்பதிவு செய்து, அந்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்