திமுக பிரமுகரை வெட்டிக்கொன்ற லோக்கல் தாதா லோகம்மா..!
சென்னையில் திமுக பிரமுகரை பெண் தாதா சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தாம்பரத்தை அடுத்த எட்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சதீஷ். திமுக பிரமுகரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவுடியான லோகம்மாள் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரவுடி லோகம்மாள் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திமுக பிரமுகர் சதீஷை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் படுகாயம் அடைந்த சதிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரவுடி லோகம்மாளை வலைவீசி தேடி வருகின்றனர். சென்னையில் திமுக பிரமுகர் ஒருவரை ரவுடி பெண்ணால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.